பிளஸ் - 2 தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி..!
minister
anbil magesh
12th exam
By Anupriyamkumaresan
தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கண்டிப்பாக நடத்தப்பட்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள அரசு சையது முர்துசா மேல்நிலை பள்ளியில் நடைபெறும் ஆசியர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிளஸ் 2 பொது தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும் என்றும், ஆனால் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும் பொது தேர்வு ஆன்லைனில் நடத்தப்படாது என்றும் மாணவர்கள் நேரடியாக வந்து தேர்வு எழுதும் வகையில் தான் இருக்கும் எனவும் கூறியுள்ளார்.