சென்னை வரும் அமைச்சர் அமித் ஷா அதிமுகவை சந்திக்க வாய்ப்பு இல்லை - வெளியான தகவல்

Amit Shah Tamil nadu AIADMK BJP Chennai
By Thahir Jun 10, 2023 07:24 AM GMT
Report

ஒருநாள் பயணமாக தமிழகம் வரும் மத்திய அமைச்சர் அமித்ஷா அதிமுக நிர்வாகிகளை சந்திக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை வரும் அமித் ஷா 

ஒருநாள் பயணமாக இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வரவுள்ளார். இன்று விமானம் மூலம் இரவு சென்னை வரவுள்ள அமித்ஷா, வேலூரில் நடக்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார்.

அதனை அடுத்து, அவர் சென்னையில் பாஜக நிர்வாகிகளுடன் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்க உள்ளார்.

Minister Amit Shah is coming to Chennai

இந்நிலையில் , பாஜக கூட்டணியில் இருக்கும் அதிமுக கட்சி சார்பாக அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்கவில்லை என்றும், அதனால் பாஜக – அதிமுக சந்திப்பு நடைபெறாது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி தற்போது சேலம் மருத்துவமனையில் மூட்டுவலி சிகிச்சையில் இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

மேலும் அதிமுக சார்ப்பிலும் யாரும் இதுவரை அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.