நிலை தடுமாறிய ஹெலிகாப்டர் - உயிர் தப்பிய உள்துறை அமைச்சர் அமித் ஷா!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பயணித்த ஹெலிகாப்டர் நிலை தடுமாறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அமித் ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அவர் நேற்று பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டார்.
அப்போது பலத்த காற்று காரணமாக புறப்பட்டதும் ஹெலிகாப்டர் தடுமாறியது. அந்த ஹெலிகாப்டர் சமநிலை இழந்து அங்கும் இங்குமாக அசைந்தது. சிறிது நேரம் விமானியால் ஹெலிகாப்டரை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை.
உயிர் தப்பினார்
இதனையடுத்து விமானி சாமர்த்தியமாக ஹெலிகாப்டரை மேல் நோக்கி இயக்கினார். கொஞ்சம் மேலே சென்ற பிறகு ஹெலிகாப்டர் சமநிலை பெற்று சரியான முறையில் பறந்தது.
இதனால் அமித் ஷா விபத்தில் இருந்து தப்பினார். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
#BREAKING : Union Home Amit Shah's helicopter lost its control while taking off.#AmitShah #begusarai #AmitShahHelicopter #Helicopter #Bihar #BJP pic.twitter.com/4qvL2UlNNV
— shivanshu tiwari (@shivanshu7253) April 30, 2024