எனக்கு தொண்டை சரியில்ல- மகளிர் உரிமைத்தொகை குறித்த கேள்விக்கு அமைச்சரின் பதில்

TVK
By Yashini Jun 29, 2026 09:55 AM GMT
Report

தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது தவெக மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2,500 உரிமைத்தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தது.

இந்த மகளிர் உரிமைத்தொகை அறிவிப்பு மகளிர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி பங்கேற்றார்.

எனக்கு தொண்டை சரியில்ல- மகளிர் உரிமைத்தொகை குறித்த கேள்விக்கு அமைச்சரின் பதில் | Minister About Rs2500 Womens Entitlement Allowance

நிகழ்ச்சி முடிவில், மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 எப்போது வழங்கப்படும் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, எனக்கு தொண்டை சரியில்லை என்று மட்டும் கூறிவிட்டு, அமைச்சர் ஜெகதீஸ்வரி வேகமாக காரில் ஏறிச் சென்றார்.

சம்மந்தப்பட்ட துறை அமைச்சரே இப்படி பதில் சொல்வதா? என குழந்தைகளுக்கு சொட்டுமருந்து போட வந்த தாய்மார்கள் பேசிக்கொண்டனர்.

அமைச்சர் ஜெகதீஸ்வரியின் இந்த பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.