"இந்தக் கட்டணமும் உயர்வு" - ஆக்ஸிஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு கிடைத்த அதிர்ச்சி தகவல்...
ஆக்ஸிஸ் வங்கி எஸ்எம்எஸ் மற்றும் மினிமம் பேலன்ஸ் என்று கட்டணத்தினை உயர்த்தியுள்ளது வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் வங்கியான ஆக்ஸிஸ் வங்கி தங்களது வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் குறைந்தபட்ச இருப்புத் தொகையை ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து ரூ. 15 ஆயிரமாக அதிகரிப்பு சில மாதங்களுக்கு முன் அமல்படுத்தியது. அதேபோல் பிரைம் மற்றும் லிபர்டி சேமிப்பு கணக்கு வைத்திருப்போருக்கு குறைந்தபட்ச இருப்பு தொகை 15 ஆயிரம் ரூபாயில் இருந்து 25 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டது.
மேலும் குறைந்தபட்ச இருப்பு தொகை வைத்திருக்காவிட்டால், குறையும் தொகையில் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் 10 ரூபாய் அபராதமாக விதிக்கப்படும். இந்நிலையில் ஜூலை 1-ஆம் தேதி முதல் எஸ்எம்எஸ் மற்றும் மினிமம் பேலன்ஸ் கட்டணத்தை உயர்த்தி ஆக்சிஸ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
அதன்படி முன்னதாக காலாண்டுக்கு ரூ.15 என்ற அளவில் வசூலிக்கப்பட்ட எஸ்எம்எஸ் தொகை தற்போது ரூ.25 நாக உயர்த்தப்படலாம் என தெரிகிறது.
அதேபோல் மினிமம் பேலன்ஸ் இல்லாவிட்டால் விதிக்கப்படும் கட்டணம் ரூ.600லிருந்து ரூ.800 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு ஆக்சிஸ் வங்கி வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.