200 ஏக்கர்; குரங்குகளுக்காகவே உருவாக்கப்படும் குட்டி நகரம் - அமைப்புகள் கடும் எதிர்ப்பு!

United States of America
By Sumathi Feb 20, 2024 07:04 AM GMT
Report

குரங்குகளை ஆராய்ச்சி செய்வதற்காக உருவாக்கப்படும் நகரத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மருத்துவ ஆய்வு

ஜார்ஜிய மாகாணம், பெய்ன்பிரிட்ஜ் நகரில் சுமார் 30,000 நீண்டவால் குரங்குகள் வசிப்பதிற்கு ஏதுவாக 200 ஏக்கர் பரப்பரவில் ஒரு குட்டி நகரம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

monkeys

இதனை மருந்து ஆராய்ச்சியில் ஈடுப்பட்டு வரும்‘சேபர் ஹியூமன் மெடிசின்ஸ்’ என்னும் அமெரிக்க மருந்து உற்பத்தி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த நகரத்தில் குரங்குகளை இனப்பெருக்கம் செய்யப்பட்டு வளர்க்கப்படும் எனவும் பின் மருத்துவ ஆய்வு மேற்கொள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு அனுபப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

குரங்கு அம்மையால் அச்சம் - விஷம் வைத்து கொல்லப்படும் குரங்குகள்..அதிர்ச்சி சம்பவம்!

குரங்கு அம்மையால் அச்சம் - விஷம் வைத்து கொல்லப்படும் குரங்குகள்..அதிர்ச்சி சம்பவம்!

குரங்குகளுக்கு நகரம்

இதுகுறித்து அப்பகுதிவாசி டேவிட் பார்பர் கூறுகையில், “பெய்ன்பிரிட்ஜ் நகரில் சுமார் 14 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இந்த நகரில் 30 ஆயிரம் குரங்குகளை வளர்த்தால் எங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும். எனவே இந்த திட்டத்தை உடனடியாக கைவிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

200 ஏக்கர்; குரங்குகளுக்காகவே உருவாக்கப்படும் குட்டி நகரம் - அமைப்புகள் கடும் எதிர்ப்பு! | Mini City For Monkeys Medical Research In America

இந்நிலையில், மருத்துவ ஆராய்ச்சிக்காக குரங்குகளை ஓரிடத்தில் அடைத்து வைத்து இனப்பெருக்கம் செய்வது கொடூரமானது என விலங்குகள் நல அமைப்புகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.