கடலில் வீசப்பட்ட பல கோடி ரூபாய் தங்கம் : மன்னார் வளைகுடா பகுதியில் பரபரப்பு

By Irumporai Feb 08, 2023 05:30 AM GMT
Report

இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் நடுக்கடலில் வீசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று காலை இலங்கையில் இருந்து கடத்தல் தங்கம் கடத்தி வரப்பட உள்ளதாக இந்திய கடலோர காவல் படைக்கும், மத்திய வருவாய் புலனாய்வுத்துறைக்கும் தகவல் கிடைத்துள்ளது.

இதனை அடுத்து இன்று அதிகாலை 5 மணி முதல் மன்னர் வளைகுடா பகுதியில் கூட்டு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக கருதப்பட்ட கடல் ராஜா என்ற நாட்டுப் படகை சோதனை செய்வதற்கு அதிகாரிகள் முற்படுவதற்கு முன்பதாகவே அந்தப் படகில் ஒரு பார்சலை கடலில் தூக்கி வீசி உள்ளனர்.

கடலில் வீசப்பட்ட பல கோடி ரூபாய் தங்கம் : மன்னார் வளைகுடா பகுதியில் பரபரப்பு | Millions Of Rupees Of Gold Thrown Into The Sea

இதனையடுத்து காவல் படையினர் படகை சுற்றி வளைத்து நாட்டுப் படகை பறிமுதல் செய்தனர். மேலும் படகில் இருந்த இரண்டு பேரிடம் கடலோர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தப் படகில் பல கோடி மதிப்பிலான அதாவது 15 முதல் 20 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டு அதிகாரி பார்த்தவுடன் பயத்தில் கடலில் வீசப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை எடுத்து தூக்கி வீசப்பட்ட தங்கத்தை தேடும் பணியில் கடலோர காவல் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன

கடலில் வீசப்பட்ட பல கோடி ரூபாய் தங்கம் : மன்னார் வளைகுடா பகுதியில் பரபரப்பு | Millions Of Rupees Of Gold Thrown Into The Sea

இந்த நிலையில் இலங்கையிலிருந்து நாட்டுப் படகில் வந்த இரண்டு பேரிடம் கடலோர காவல்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.