உலகளவில் பத்து கோடியை கடந்த கொரோனா பாதிப்பு.! தற்போதைய நிலை என்ன?

corona usa report
By Jon Jan 26, 2021 05:35 PM GMT
Report

உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 10.02 கோடியாக உயர்ந்துள்ளது. திங்கள்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 10,02,86,772 பேருக்கு நோய்த் தொற்று பாதித்துள்ளது. அவா்களில் 21,49,507 பேர் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 7,23,13,625 பேர் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 2,58,21,791 போ தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,10,255 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அமெரிக்‍காவில் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 2,58,61,597 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்‍கை 4 லட்சத்து 31 ஆயிரத்து 392 ஆக உயர்ந்துள்ளது.

2-ஆவது இடத்தில் உள்ள இந்தியாவில் 1,06,77,710 பேர் தொற்றுக்குப் பாதிக்‍கப்பட்டுள்ளனர். இதுவரை 1,53,624 பேர் உயிரிழந்துள்ளனர். 3-வது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 88,72,964 ஆக உயர்ந்துள்ளது. 2,17,712 பேர் வைரஸ் தொற்றுக்கு பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.