தமிழகத்தில் 11ம் தேதி பால் கிடைக்காது : அதிர்ச்சியில் பொதுமக்கள்

By Irumporai Mar 01, 2023 10:42 AM GMT
Report

மார்ச் 11 ம் தேதி முதல் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.

ஆவின் பால்

ஆவின் பால் உற்பத்தியாளர்கள் பால் கொள்முதலுக்கான விலையை ரூ 7 உயர்த்தி அறிவிக்கப்பட்டால் வரும் 11 ம் தேதி பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஒரு லிட்டர் பாலுக்கு ஆவின் ரூ30 ம் தனியார் பால் நிருவனங்களுக்கு ரூ 45 வரை தருவதாக தெரிவிக்கின்றனர்

தமிழகத்தில் 11ம் தேதி பால் கிடைக்காது : அதிர்ச்சியில் பொதுமக்கள் | Milk Producers Association Announcement

போராட்டம்

ஆகவே பால் கொள்முதல் விலையினை ஆவின் உயர்த்த வேண்டும் என பால் உறபத்தியாளர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் மதுரை பால் பண்ணையில் பொது மேலாளரை சந்தித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் .பால் கொள்முதலுக்கான விலையை உயர்த்த வேண்டும் என க்கோரிக்கை விடுத்தனர்.

எங்களது கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்றாவிட்டால், வரும் 11-ஆம் தேதி போராட்டம் நடத்துவோம் என்றனர்

இந்த் அறிவிப்பு பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.