பட்டபகலில் மனைவியுடன் சென்ற பால் வியாபாரியை வெட்டி படுகொலை செய்த கும்பல் - போலீசார் வலைவீச்சு..!

Police Murder Kovilpatti enquiry MilkMan
By Thahir Mar 26, 2022 12:08 AM GMT
Report

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் 7வது தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் மணி(50). இவர் மாடு வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார்.

இவருக்கு திருமணமாகி பேச்சியம்மாள் என்ற மனைவியும், முத்துபேசி என்ற மகளும், நயினார் என்ற மகனும் உள்ளனர்.

நேற்று மதியம் வீரவாஞ்சி நகர் 9வது தெரு வில் உள்ள தனது மாட்டு தொழுவத்திற்கு பால் கறப்பதற்காக மணி தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று உள்ளார்.

அங்கு ஓரத்தில் இருசக்கர வாகனத்தின் நிறுத்தி விட்டு கீழே இறங்கும் போது அங்கு நின்று கொண்டிருந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் மணியே சரமாரி வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர்.

இதில் மணியின் கை மற்றும் கழுத்துப் பகுதியில் வெட்டு விழுந்து ரத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே தனது மனைவி கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணி உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இக்கொலைச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.‌கொலை செய்யப்பட்ட மணிக்கு சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டானையடுத்த வடகரை.‌

கடந்த 2010ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது இளைஞர் கொலை வழக்கில் மணிக்கு தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து மணி குடும்பத்துடன் அங்கிருந்து கோவில்பட்டி வீரவாஞ்சி நகரில் குடியேறி வசித்து வந்துள்ளார்.

2010ல் ஏற்பட்ட முன்பகை காரணமாக கொலை நடந்ததாஉள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவையும் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.