ஒரு முட்டையின் விலை ரூ.36, ஒரு கிலோ கோழி கறி ரூ.1000, ஒரு டீ ரூ.100 - இலங்கையில் மக்கள் அவதி
இலங்கையில் முட்டை மற்றும் கோழிக்கறியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
வரலாற்றில் இல்லாத அளவிற்கு இலங்கையில் மிக மோசமான பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது. அங்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள், எரிபொருட்கள், ஆடைகள், கட்டுமானப் பொருட்கள் போன்றவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.
இதனால் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

இலங்கையில், தற்போது ஒரு முட்டையின் விலை 32 முதல் 36 ரூபாய் வரையிலும், கோழிக்கறி கிலோ 850 முதல் 1000 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் 1 கிலோ துவரம் பருப்பு விலை 380 ரூபாய்க்கும், டீ 100 ரூபாய்க்கும் வடை ரூ.80-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ சம்பா அரிசி விலை 210 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கேஸ் சிலிண்டர் வாங்க மக்கள் பல கிலோ மீட்டர் லைனில் நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.