விவாகரத்து செய்த மகன் - பாலாபிஷேகம் செய்து கொண்டாடிய தாய்!
Viral Video
Maharashtra
Divorce
By Sumathi
விவாகரத்து பெற்றதை இளைஞரும் அவரது தாயும் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
விவாகரத்து
மகாராஷ்டிராவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றதை கொண்டாடியுள்ளார். மேலும் அவரது தாயும் இந்த கொண்டாட்டத்தில் இணைந்துள்ளார்.
இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், மனைவியை விவாகரத்து செய்ததோடு, மனைவி கொண்டு வந்த 120 கிராம் தங்க நகை, ரூ.18 லட்சம் பணத்தை திரும்ப கொடுத்துள்ளார்.
கொண்டாடிய குடும்பம்
அவரின் தாய், மகனுக்கு பாலபிஷேகம் செய்து, புது துணி வாங்கிக்கொடுத்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். தொடர்ந்து விவாகரத்துக்குப்பின் தான் சிங்கிளாகவும்,
மகிழ்ச்சியாகவும் இருப்பதாகவும் அந்த இளைஞர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.