தமிழகத்தில் பால், பேருந்து கட்டணம் உயர்கிறதா? - அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

tamilnadu milkpricehike busfarehike
By Petchi Avudaiappan Mar 26, 2022 08:13 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

தமிழகத்தில் பால், பேருந்து கட்டணம் உயர்கிறதா என்பது குறித்து அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்துள்ளார். 

5 மாநில தேர்தலுக்கு பிறகு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வு காரணத்தால் தமிழகத்தில் பால், பேருந்து கட்டணம் உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்தார். 

தமிழகத்தில் பால், பேருந்து கட்டணம் உயர்கிறதா? - அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் | Milk And Bus Fare Hike In Tamilnadu

அப்போது, அரசு அதிகாரிகள் அதிக சம்பளம் கேட்டு போராடி வருகின்றனர். எனவே பால், பஸ் கட்டணம் உள்ளிட்டவற்றில் சிறிய மாற்றம் இருக்கும். இந்த விலையேற்றத்தை வேண்டுமென்றே அரசு திணிப்பதில்லை. அதிமுக ஆட்சியில் விலையை ஏற்றவில்லையா?.  பொருளாதார ரீதியாக ஏற்றம் வரும்பொழுது ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்கள் அதை சந்திக்கத்தான் வேண்டும்.

பால் விலை, பஸ் கட்டணத்தில் வரும் மாற்றம் குறித்து தமிழக முதலமைச்சர் முடிவெடுத்து அறிவிப்பார் எனவும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். அமைச்சரின் இந்த பதிலால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.