பெரியார் கட்-அவுட்டிற்கு பாலாபிஷேகம் - இதுவா பகுத்தறிவு என இணையவாசிகள் கேள்வி
பெரியாரின் 143 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பெரியாரின் கட் அவுட்டிற்கு சட்டக்கல்லூரி மாணவர்கள் சிலர் பாலாபிஷேகம் செய்து உள்ளது செய்துள்ளது சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
பகுத்தறிவு பகலவன் என்று போற்றப்படும் பெரியாரின் 143 ஆவது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்ட சமூக நீதிநாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இதனிடையே சேலம் சட்டக்கல்லூரி மாணவர்கள் சிலர் பெரியாரின் கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.
மேலும் இதுவா பகுத்தறிவு? என கேள்வி எழுப்பியுள்ள இணையவாசிகள் பெரியாரின் பிறந்த நாளை கொண்டாடினால் மட்டும் போதாது அவருடைய கொள்கைகளை சரியாக பின்பற்ற வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.