நடுவானில் ஹெலிகாப்டர்கள் மோதி பயங்கர விபத்து - 5 வீரர்கள் பலி!
ஹெலிகாப்டர் விபத்தில் 5 வீரர்கள் உடல் சிதறி பலியாகியுள்ளனர்.
ஹெலிகாப்டர் விபத்து
துருக்கி, தென்மேற்கு மாகாணமான ஈஸ்வர்ட்டா என்ற பகுதியில், ஹெலிகாப்டரில் ராணுவ வீரர்கள் பயிற்சி நடைபெற்றது. அப்போது எதிர்பாராத வகையில் இரண்டு ஹெலிகாப்டர்கள் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டது.
இதில் ஒரு ஹெலிகாப்டர் பாதுகாப்பாக தரையிறங்கியது. மற்றொரு ஹெலிகாப்டர் கீழே விழுந்து சுக்குநூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் ராணுவ ஜெனரல் உட்பட ஐந்து வீரர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
5 வீரர்கள் பலி
ஒருவர் மட்டும் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் அவரும் இறந்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது.
இதனையடுத்து தற்போது இச்சம்பவம் குறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.