மருமகளை கழுத்தறுத்துக் கொன்ற மாமியார் - அதிரவைக்கும் பின்னணி
மாந்திரீகம் செய்வதாகக் கூறி மருமகளை, மாமியார் கொலை செய்துள்ளார்.
மருமகள் கொலை
கள்ளக்குறிச்சி, வளையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நந்தினி (29). இவர் தனது முதல் கணவர் மறைவிற்குப் பிறகு, மரிய ரொசாரியோ என்பவரைக் காதலித்து இரண்டாம் திருமணம் செய்துகொண்டார்.

இந்தத் திருமணம் மரிய ரொசாரியோவின் தாய் கிறிஸ்தோப்மேரிக்கு விருப்பமில்லாததால், குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தனது மகனுக்கு வேறு திருமணம் செய்து வைக்கத் திட்டமிட்ட தாய் தோழி எமிலியுடன் சேர்ந்து மருமகளை கொல்ல திட்டமிட்டுள்ளார்.
தொடர்ந்து குடும்பப் பிரச்சினைகள் தீரக் கோவிலில் மாந்திரீகம் செய்ய வேண்டும் என்று ஆசை வார்த்தை கூறி நந்தினியை மணிமுக்தா ஆற்றின் கரையோரம் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பூஜையில் அமர வைத்து,
மாமியார் கொடூரம்
கண்ணை மூடிக்கொள்ளச் சொல்லிவிட்டு, மறைத்து வைத்திருந்த கத்தியால் நந்தினியின் கழுத்தை அறுத்துத் தலையைத் துண்டித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின் உடலையும் தலையையும் வெவ்வேறு இடங்களில் புதைத்துவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
இதனையடுத்து நந்தினியைக் காணவில்லை என அவரது கணவர் போலீஸில் புகாரளித்துள்ளார். தொடர் விசாரணையில், கிறிஸ்தோப்மேரி மற்றும் அவரது தோழி எமிலி கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். தற்போது இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.