விமான பயணத்தின்போது கடுப்பேற்றிய நபரை ’முகத்தில் ஓங்கி ஒன்று’ வைத்த மைக் டைசன் - வைரல் வீடியோ

Viral Video
By Swetha Subash Apr 22, 2022 08:15 AM GMT
Swetha Subash

Swetha Subash

in சமூகம்
Report

விமானத்தில் பயணம் செய்த போது தொடர்ந்து தொந்தரவு செய்த நபரைன் முகத்தில் ஒரே குத்து குத்திய மைக் டைசனின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

பிரபல முன்னாள் குத்துச்சண்டை வீரர்  மைக் டைசன் ஏற்கனவே அவருடைய வன்முறை நடவடிக்கைகளுக்கு பெயர் போனவர் என்பது எல்லாரும் அறிந்ததே. 1997-ம் ஆண்டு ஒருவரது காதை மைக் டைசன் கடித்து துப்பிய செய்தியை எல்லாம் அவ்வளவு எளிதில் கடந்து சென்றுவிட முடியாது.

தற்போது அப்படிபட்ட நிகழ்வு இன்று தான் மீண்டும் ஒருமுறை நடந்துள்ளது.

சான் ஃப்ரான்ஸிஸ்கோ விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய விமானத்தில் பயணம் செய்த மைக் டைசனின் பின் சீட்டில் அமர்ந்திருந்த நபர் ஒருவர் தொடர்ந்து மைக் டைசனுக்கு தொந்தரவு கொடுக்கும் வகையில் பேசிகொண்டே இருந்துள்ளார்.

விமான பயணத்தின்போது கடுப்பேற்றிய நபரை ’முகத்தில் ஓங்கி ஒன்று’ வைத்த மைக் டைசன் - வைரல் வீடியோ | Mike Tyson Attacking A Man On Flight Goes Viral

மைக் டைசன் அந்த பயணியை அமைதியாக இருக்கும்படி கூறிவந்ததாகவும் ஆனால் அந்த பயணி அவரை தொடர்ந்து தொந்தரவு செய்தபடி காதில் கத்தியபடியே இருந்ததாகவும் விமானத்தில் பயணம் செய்தவர்கள் தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த மைக் டைசன் தன் சீட்டில் இருந்து எழுந்து, பின் இருக்கையில் இருந்த பயணியின் முகத்தில் சராமாரியாக தாக்குகிறார்.

அதன்பின் முகத்தின் ரத்த காயத்துடன் அந்த பயணி சில முக பாவனைகளை சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார். இதன் பின்னர் விமானம் கிளம்புவதற்கு முன்பே மைக் டைசன் விமானத்தில் இருந்து வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது.