வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படும் வீடியோ : விளக்கம் கொடுத்த பீகார் காவல்துறை

Bihar
By Irumporai Mar 06, 2023 11:44 AM GMT
Report

வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரவிய வீடியோக்கள் போலி என்பது உறுதி என பீகார் அதிகாரிகள் குழு செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

பொய்யான வீடியோ பரவல்

வட மாநில தொழிலாளர்கள் குறித்து பொய்யான வீடியோக்கள் வெளியிட்டுள்ளது தெரியவந்துள்ளது என பீகார் அதிகாரிகள் குழு தெரிவித்துள்ளது. வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக கோவையில் மாவட்ட ஆட்சியர், எஸ்பிஐ உடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய பீகார் ஊரக வளர்ச்சித்துறை செயலர் பாலமுருகன், புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரவிய வீடியோக்கள் போலி என்பது உறுதியாகியுள்ளது.

வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படும் வீடியோ : விளக்கம் கொடுத்த பீகார் காவல்துறை | Migrant Workers Is Sure To Be Fake Bihar Official

சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட வீடியோக்கள் பொய் என்பதை புலம்பெயர் தொழிலாளர்களிடம் விளக்கினோம். மாவட்ட நிர்வாகம், காவல்துறை உதவியுடன் வட மாநில தொழிலாளர்களின் அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

பீகார் காவல்துறை விளக்கம்

மாவட்ட நிர்வாகம், காவல்துறை உடனான ஆலோசனை திருப்திகரமாக இருந்தது. தொழில் நிறுவனங்களும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பை ஏற்பாடு செய்துள்ளது எனவும் கூறினார். இந்த வீடியோக்கள் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது எந்த அச்சம் தணிந்து வருகிறது எனவும் குறிப்பிட்டனர் இதனிடையே, வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய ஒருவர் பீகாரில் கைது செய்யப்பட்டுள்ளது என்று அம்மாநில காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

போலி வீடியோக்களை நீக்க ட்விட்டர், பேஸ்புக், யூடியூப் நிறுவனங்களுக்கு பீகார் காவல்துறை கடிதம் எழுதியுள்ளது. திட்டமிட்டு வதந்தி பரப்பப்பட்டுள்ளது. பீகாரில் இருந்து தனிப்படை போலீசார் தமிழ்நாடு வருகை தந்துள்ளனர். ஹோலி பண்டிகைக்காக மட்டுமே தொழிலாளர்கள் ஊருக்கு செல்கிறார்கள், அச்சப்படும் சூழல் எதுவும் இல்லை என பீகார் காவல்துறை கூடுதல் இயக்குநர் கூறியுள்ளார்.