நள்ளிரவில் நண்பரை எரிந்த கொடூரர்கள்: குற்றவாளிகள் சிக்கியது எப்படி?
சென்னையில் நள்ளிரவில் நடைபாதையில் வைத்து நண்பரின் உடலை எரித்த குற்றவாளிகளை போலீசார் மடக்கி பிடித்தனர். சென்னை நொளம்பூரில் நடைபாதையில் வைத்த இறந்த நபரின் உடலை 2 பேர் எரித்துக் கொண்டிருந்தனர், இதை பார்த்த தர்மராஜ்(வயது 30) என்பவர் உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்தார்.
உடனடியாக போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்தனர், இவர்களை பார்த்ததும் தப்பியோட முயன்ற குற்றவாளிகளை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், இருவரும் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களது பெயர் விஷ்ணு(33), பாஸ்கர்(44) என்பதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் சிவக்குமார்(வயது 25) என்பவரின் உடலை எரித்தது கண்டுபிடிக்கப்பட்டது, சம்பவ தினத்தன்று விஷ்ணு, பாஸ்கர், சிவக்குமார் ஆகியோர் ஒன்றாக மது அருந்தியுள்ளனர்.
பின்னர் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு உண்டாது. இதில், விஷ்ணுவும் பாஸ்கரும் சேர்ந்து சிவக்குமாரை கல்லால் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இதனையடுத்து கொலையை மறைக்க இருவரும் அவரது உடலை எரித்துள்ளனர், இதைத்தொடர்ந்து பாதி எரிந்த நிலையில் சிவக்குமார் சடலம் மீட்கப்பட்டது.
இந்நிலையில், கொலையாளிகளை பிடிக்க உதவும் வகையில் தகவல் அளித்த டீ வியாபாரியை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.