இணையத்தை கலக்கி வரும் மைக்செட் டீமின் ஹே சிங்காரி பாடல்! ரசிகர்கள் குஷி!

viral micset sriram album song
By Anupriyamkumaresan Jun 30, 2021 09:44 AM GMT
Report

யூடியூப் புகழ் மைக்செட் குழுவினரின் முதல் ஆல்பம் பாடம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஹே சிங்காரி என்று துவங்கும் அந்த பாடலில் சூப்பராக குத்தாட்டம் போட்டுள்ளார் மைக்செட் ஸ்ரீராம்.

இந்த பாடலை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் பாடியுள்ளார். யூடியூப்பில் மைக்செட் குழுவினர் விதவிதமான வீடியோக்களைபதிவிட்டு அதன்மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளனர்.

இணையத்தை கலக்கி வரும் மைக்செட் டீமின் ஹே சிங்காரி பாடல்! ரசிகர்கள் குஷி! | Micset Sriram Album Song Viral

இவர்களது சோதனைகள் அடிப்படையிலான வீடியோக்கள் மிகவும் பிரபலமானவையே ஆகும். இவர்கள் வாரத்திற்கு ஒருமுறை வீடியோக்களை பதிவிட்டாலும் ரசிகர்கள் காத்திருந்து ஆதரவு அளித்து வருகின்றனர்.

ஸ்ரீராமின் இயல்பான நடிப்பு மூலம் பிரபலமான மைக்செட் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இணையத்தை கலக்கி வரும் மைக்செட் டீமின் ஹே சிங்காரி பாடல்! ரசிகர்கள் குஷி! | Micset Sriram Album Song Viral

அந்த வகையில், தற்போது புதிய முயற்சியாக தனிப்பட்ட ஆல்பம் பாடல் ஒன்றை இயக்கி மைக்செட் குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.