மீண்டும் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மைக்ரோசாஃப்ட் : காரணம் என்ன?
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மேலும் 559 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. மைக்ரோசாஃ callகடந்த சில நாட்களாக உலகில் உள்ள பல டெக் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்து வருகின்றது
அந்த வகையில் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தொடர்ந்து பணிநீக்கம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள புதிய தகவலின்படி அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள மைக்ரோசாப்ட் பெல்லூ மற்றும் ரெட்மாண்டில் அலுவலகங்களில் பணி புரியும் 559 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

பணிநீக்கம் இதுவரை, இந்நிறுவனம் வாஷிங்டன் சியாட்டில் பகுதியில் மட்டும் 2,743 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக கூறப்படுகின்றது கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் சுமார் 10,000 பேரை பணி நிக்கம் செயத நிலையில் மொத்தம் 2,20,000 பணியாளர்கள் பணியில் இருந்தனர் , \
தற்போது பணிநீக்கங்கள் காரணமாக அதன் பணியாளர்களில் 5 சதவீதம் குறைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
தொடர்ந்து பெரும் நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கையில் இறங்கியுள்ளது பல டெக் ஊழியர்களை பீதியடைய செய்துள்ளது, இந்த பணிநீக்கத்திற்கு பொருளாதார மந்த நிலைதான் காரணமாக கூறப்படுகின்றது.