10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் : வெளியான அதிர்ச்சி தகவல்

Microsoft
By Irumporai Jan 18, 2023 09:01 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

மைக்ரோசாப்ட் நிறுவனம் மனித வளம் மற்றும் பொறியியல் பிரிவில் சுமார் 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

மைக்ரோசாப்ட் பணி நீக்கம்

உலகின் முன்னணி நிறுவனமாக கருதப்படும் மைக்ரோசாப்ட் நிறுவனம் உலகம் முழுவதும் 2 லட்சத்து 21 ஆயிரம் ஊழியர்களை உள்ளடக்கி இயங்கி வருகிறது. ஒரு லட்சத்து 22 ஆயிரம் அமெரிக்காவிலும், 99 ஆயிரம் பேர் உலகம் முழுவதும் உள்ள அதன் கிளை நிறுவனங்களிலும் பணிபுரிந்து வருகின்றனர். ஒரு வேளை பணி நீக்கம் செய்யப்பட்டால் அந்நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் ஐந்து சதவீதமாகும்.

10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் : வெளியான அதிர்ச்சி தகவல் | Microsofjobs This Week As Layoff

ஆட்களை குறைக்கும் நிறுவனங்கள்

கடந்த சில நாட்களுக்கு முன்பு twitter, meta போன்ற பல பெரிய நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் அமேசானில் நிறுவனத்தில் இருந்து 20 ஆயிரம் பேர் பணியில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.