தாய்ப்பாலில் மைக்ரோ பிளாஸ்டிக்.. தாய்மார்களே கவனம் - அதிர்ச்சி தகவல்!
தாய்ப்பாலில் மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் கலந்திருப்பதாக முதன் முதலில் கண்டறியப்பட்டுள்ள தகவல் அதிர்ச்சியளிக்கிறது.
தாய்ப்பால்
இத்தாலியில், தாய்ப்பாலின் தரம் தொடர்பாக சுகாதாரத்துறை நிபுணர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டனர். இதில் மைக்ரோ பிளாஸ்டிக் தொடர்பான ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக குழந்தைகள் பிறந்த ஒரு வாரத்தை கடந்த 34 தாய்மார்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களிடம் இருந்த சேகரிக்கப்பட்ட தாய்ப்பால் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. தொடர்ந்து, ஆராய்ச்சி முடிவில், பாலிதீன், பிவிசி எனும் பாலிவினைல் குளோரைடு மற்றும் பாலிப்ரோப்பிலீன் ஆகியவற்றால் ஆன மைக்ரோபிளாஸ்டிக்கள் தாய்ப்பாலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோபிளாஸ்டிக்
இந்த ஆய்வின்போது 75 சதவீத தாய்ப்பாலில் மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் என்பது 5மிமீ நீளத்துக்குள் இருக்கும் சிறிய வகையிலான பிளாஸ்டிக் தூசியாகும். இருப்பினும் தாய்ப்பாலில் மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் இருப்பது என்பது குழந்தைகளின் உடல் நலனை பாதிக்கலாம்.

இதனால் இதுபற்றி விரிவான ஆராய்ச்சி தேவை என நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஆராய்ச்சியில் பங்கெடுத்த தாய்மார்கள் பிளாஸ்டிக் பொட்டலங்களில் உள்ள உணவு பொருட்களை சாப்பிட்டு குளிர்பானங்களை பயன்படுத்துகின்றனர். இதுமட்டுமின்றி மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் உள்ள கடல்வாழ் உயிரினங்களையும் சாப்பிடுவதோடு,
ஆராய்ச்சி முடிவு
பிளாஸ்டிக்கில் வழங்கப்படும் சுகாதாரம் சார்ந்த பொருட்களையும் அவர்கள் பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது. இருப்பினும் தாய்ப்பாலில் மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் இருப்பதற்கும் இதற்கும் உள்ள தொடர்புகள் நிரூபிக்கப்படவில்லை. மேலும் தற்போது சுற்றுச்சூழலில் அனைத்து இடங்களிலும் மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் தூசிகள் பரவி உள்ளன.
பெண்கள் அனைவரும் பல இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளதால் வரும் காலத்தில் இது இயல்பானதாக மாறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இத்தாலி அன்கோனாவில் உள்ள யுனிவர்சிட்டா பாலிடெக்னிகா டெல்லே மார்ச்சி டாக்டர் வாலண்டினா நோட்டார்ஸ்டெபனோ கூறுகையில்,
அதிர்ச்சி தகவல்
‛‛தாய்ப்பாலில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் இருப்பதற்கான ஆதாரங்கள் ஆராய்ச்சி மூலம் கிடைத்துள்ளன. இதனால் குழந்தைகளின் நலனை அக்கறையுடன் கருத்தில் கொள்ள வேண்டும். கர்ப்பம் தரிக்கும் போதும், பாலூட்டும் காலங்களிலும் தாய்மார்கள் அதிக கவனமுடன் இருக்க வேண்டும்.
மேலும் அவர்கள் வெளியில் செல்வதை தவிர்ப்பதோடு தாய்ப்பாலில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் அளவை குறைக்கும் வழிமுறைகளை தாய்மார்கள் அறிந்து கொள்ள வேண்டும். மாசுக்கான மைக்ரோபிளாஸ்டிக்களால் ஏற்படும் தீமைகளை விட தாய்ப்பால் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள் அதிகம் என்பதை
தாய்மார்கள் கவனத்தில் வைத்து கொள்ள வேண்டும். ஏனென்றால் குழந்தைகளுக்கு தாய்ப்பால் மிகவும் முக்கியமானதென கூறியுள்ளார்.