குறைந்த விலையில் தரமான ஸ்மார்ட் போன் - இது ஒரு மைக்ரோமேக்ஸ் தயாரிப்பு..!

Micromax b2 smartphone Best smart phones
By Petchi Avudaiappan Jul 30, 2021 07:23 PM GMT
Report

 மைக்ரோமேக்ஸ் நிறுவனம் புதிதாக இன் 2B ஸ்மார்ட்போனை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு சீனாவுக்கு எதிரான அலை இந்தியாவில் உருவான போது மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இன் 1B ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி மாபெரும் வெற்றியைப் பெற்றது.

இந்நிலையில் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள இன் 2B ஸ்மார்ட் போனில் 6.52 இன்ச் ஹெச்டி டிஸ்பிளே, ரியர் சைடில் கைரேகை சென்சார், 5000 mAh பேட்டரி, 5 MP செல்ஃபி கேமரா, 13 MP பிரைமரி கேமரா, 4ஜிபி மற்றும் 6ஜிபி ரேம் , 64 ஜிபி ரோம், 3 வகை நிறங்கள் என சூப்பரான சிறப்பு அம்சங்களுடன் வெளியாகியுள்ளது.

இதன் விலை ரூ.7,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.