சூப்பரான வசதிகளோடு வெளியான புதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் - எவ்வளவு தெரியுமா?

micromaxinnote2 budgetsmartphone
By Petchi Avudaiappan Jan 29, 2022 08:42 PM GMT
Report

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் மொபைல் சந்தையில் தனது புதிய இன் நோட் 2 ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. 

மொபைல் சந்தையில் உள்ள முன்னணி நிறுவனங்கள் பலவும் வாடிக்கையாளர்களை கவர நாளுக்கு நாள் பல்வேறு வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட்போன் உள்ளிட்ட தயாரிப்புகளை வெளியிட்டு வருகிறது. 

அந்த வகையில் மைக்ரோமேக்ஸ் நிறுவனம்  புதிய இன் நோட் 2 ஸ்மார்ட்போனினை  அறிமுகம் செய்துள்ளது. இதில் 6.43 இன்ச் எப்.ஹெச்.டி.பிளஸ் 1080x2400 பிக்சல் அமோலெட் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி 95 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 48 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்.பி. மேக்ரோ கேமரா, 2 எம்.பி. டெப்த் கேமரா மற்றும் 16 எம்.பி. செல்ஃபி கேமரா ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். கனெக்டிவிட்டிக்கு 4ஜி எல்.டி.இ. வைஃபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப் சி, பக்கவாட்டில் கைரேகை சென்சார்  ஆகியவற்றுடன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி திறன் கொடுக்கப்பட்டுள்ளது. இது கருப்பு மற்றும்  பழுப்பு நிறங்களில் கிடைக்கிறது. 

இந்த புதிய மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2 விலை ரூ. 13,490 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஜனவரி 30 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு ப்ளிப்கார்ட் மற்றும் மைக்ரோமேக்ஸ் வலைதளங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 1000 குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.