மனிதனின் உயிரணுக்களைக் குறிவைக்கும் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் - ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

micro plastic research reveals can kill human cells shock report
By Thahir Dec 15, 2021 09:59 AM GMT
Report

கண்களுக்குத் தெரியாமல் உட்கொள்ளும் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களால் மனித உயிர் செல்லுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் தற்போதைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் நவீனமயமாக மாறி வருகிறது.

இதனால், மனிதர்கள் உணவு வழியாக, நீர் வழியாக, காற்று வழியாக என்று பல்வேறு வழிகளில் பிளாஸ்டிக்கை உட்கொண்டு வருகிறார்கள்.

மக்கள் தங்களது கண்களுக்குத் தெரியாமலே மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களை உட்கொள்கிறார்கள்.இதுகுறித்து, ஆசிரியரான, ஆய்வாளர் எவாங்கேலோஸ் டானோபோலோ ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில், “அறிவியல் ஆராய்ச்சியில் பிளாஸ்டிக் துகள்கள் ஒரு மனிதனின் உயிரணுக்களை பாதிக்கிறது. இது ஒரு உயிர்க்கொல்லியாக இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், 5 மைக்ரோ மீட்டருக்கும் குறைந்த, மிகவும் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் தான் இதற்கு காரணம். இந்த பிளாஸ்டிக் நுண்துகள்கள் சாதாரண கண்களுக்குத் தெரியாது.

முறையாக கவனிக்கப்படாத பிளாஸ்டிக் கழிவுகள் உடைந்து சிதறும்போது இந்த நுண்துகள்கள் உருவாகின்றன. நாம் வாங்கும் அனைத்து பொருட்களிலும் கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய துகள்கள் உள்ளன.

இந்த நுண்துகள்கள் மனிதனின் உயிர்க் கொல்லியாகத் திகழ்கிறது. மக்கள் சுவாசிக்கும்போது இதை உட்கொள்ள நேரிடுகிறது. நெகிழிக் கழிவுகளை நாம் கையாளும் முறை இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றது.

மக்கள் கழிவுகளைத் திறந்தவெளியில் கொட்டிவிடுவதைத்தான் வழக்கமாகச் செய்கின்றனர். வெப்பம், காற்று, நீர் ஆகியவை அதிகமாக கழிவுகளின்மீது படும்போது, பிளாஸ்டிக் பொருள்கள் கண்களுக்கு தெரியாத அளவில் உடைந்து நுண்ணிய துகள்களாக வெளியேறுகின்றன.

சாதாரண தூசுகளை மக்கள் சுவாசிக்கும் போது அவற்றோடு சேர்ந்து இந்த பிளாஸ்டிக் துகள்களும் உள்ளே சென்று பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

இதனால் மனிதனின் உயிரணுக்ககளில் பாதிப்பு ஏற்படும் ஆபத்து உண்டு. மக்கள் இது குறித்து, விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பிளாஸ்டிக் தானே என்று அலட்சியமாக இருக்க வேண்டாம்.’’