ஆபாச படத்தை அழித்த பெற்றோர் .. நஷ்டஈடு கேட்ட மகன் .. நீதிமன்றம் வழங்கிய வினோத தீர்ப்பு

michigancouple porn videos collection payson
By Irumporai Aug 29, 2021 11:19 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

அமெரிக்காவில் மகன் வைத்திருந்த ஆபாச வீடியோக்களை அழித்த பெற்றோருக்கு 30,411 டாலர் அபராதம் விதித்து மிச்சிகன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அமெரிக்காவில் ஆபாச வீடியோக்கள் பார்ப்பதோ, அதை வைத்திருப்பதோ  குற்றமில்லை இந்த நிலையில் 43 வயதான டேவிட் தனது தாய், தந்தையுடன் கிராண்ட் ஹெவ்வன் என்ற இடத்தில் வசித்து வந்திருக்கிறார்.

பின்னர் அவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 மாதமாக பிரிந்து மன்சி என்ற இடத்தில் தனியாக வசித்வருகிறார். இந்த நிலையில் பெற்றோரை பிரிந்து வந்த பிறகுதான் தான் சேர்த்து வைத்திருந்த ஆபாச வீடியோக்கள், டிவிடிக்கள், பாலியல் தொடர்பான இதழ்கள் உள்ளிட்டவை காணாமல் போனதைக் கண்டுபிடித்துள்ளார்.

  இதுதொடர்பாக அவரது பெற்றோரிடம் கேட்டதற்கு, அவர்கள் அவற்றையெல்லாம் குப்பையில் வீசிவிட்டதாகவும் டெலிட் செய்துவிட்டதாகவும் கூறியுள்ளனர். இதனால் கோபமான  டேவிட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

டேவிட் தனது மனுவில் தன்னுடைய  பெற்றோர் தனது ஆபாச வீடியோக்களை தனது அனுமதியின்றி அழித்துவிட்டதாகவும் அதன் மதிப்பு சுமார் 29,000 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.21.31 லட்சம்) எனவும்  அதற்குண்டான மதிப்பை பெற்றுத்தருமாறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணை கடந்த எட்டு மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி பால் மாலனி தீர்ப்பு வழங்கியுள்ளார். இந்த வழக்கில் மிக முக்கிய ஆதரமாக டேவிட்டின் தந்தை அனுப்பிய மெயில் அமைந்திருப்பதால்  அழிக்கப்பட்ட வீடியோக்கள் அனைத்தும் டேவிட்டுக்கு சொந்தமானது , ஆகவே டேவிட் அனுமதியின்றி அவரது வீடியோக்களை  அழித்த குற்றத்திற்காக டேவிட்டின் தந்தைக்கு  அபராதம் விதிப்பதாக நீதிபதி மாலனி தெரிவித்துள்ளார்.