ஒரு விஷயத்தை மாற்றினால் இந்திய அணி முன்னேறிவிடும் - முன்னாள் வீரர் கருத்து விராட் கோலி
இந்த ஒரு விஷயத்தை மாற்றினால் இந்திய அணி முன்னேறிவிடும் என முன்னாள் வீரர் மைக்கேல் ஹோல்டிங் அறிவுரை வழங்கியுள்ளார்.
சமீபத்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்து அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால் கேப்டன் விராட் கோலி தலைமை பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என கடும் எதிர்ப்பு எழுந்தது.
இந்நிலையில்மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஹோல்டிங், பேட்டிங்கில் மட்டுமல்லாமல் எதிரணி வீரர்கள் தனக்கு என்ன செய்கிறார்களோ அதை பதிலுக்கு இரண்டு மடங்கு பெரிதாக செய்வதிலும் விவியன் ரிச்சர்ட்ஸ் போல விராட் கோலி செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது கோபத்தை சற்று குறைத்துக் கொள்ள வேண்டும்.
அது பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், அவரது தலைமையின் கீழ் விளையாடும் வீரர்களுக்கு அது சில நேரங்களில் ஆபத்தாய் போய் முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். ஆக்ரோஷம் தேவைதான், அதை எந்த நேரத்தில் எந்த அளவில் வெளிப்படுத்த வேண்டுமோ அந்த நேரத்தில் அந்த அளவு மட்டுமே வெளிப்படுத்த வேண்டும் என்றும் மைக்கேல் ஹோல்டிங் அறிவுரை வழங்கியுள்ளார்.