அப்புறம் IPL - ஐ நிறுத்தலாமே : பிசிசிஐ சீண்டிய மைக்கேல் வாகன்

covid19 natarajan bcci ipl2021 michaelvaughan
By Irumporai Sep 22, 2021 01:34 PM GMT
Report

சன்ரைசர்ஸ் வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டாலும் இன்றைய போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கிண்டல் செய்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் 2021 தொடர் பாதியிலே நிறுத்தப்பட்ட நிலையில் கடந்த 19-ம் தேதி ஐக்கிய அமீரகத்தில் ஐபிஎல் தொடரின் 2-வது பாதி தொடங்கியது.இதுவரை 3 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இன்று டெல்லி - சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற உள்ளது.

பிசிசிஐ-ன் விதிமுறை படி ஒவ்வொரு போட்டிக்கு முன்னும், பின்னும் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதன்படி இன்று காலை சன்ரைசர்ஸ் அணி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டாலும் இன்றைய போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பிசிசிஐ விமர்சித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், ஐபிஎல் தொடர் கடைசி டெஸட் (இந்தியா vs இங்கிலாந்து, மான்செஸ்டர் டெஸ்ட்) போல ரத்து செய்யப்படுமா என்று பார்ப்போம். ஆனால் அது நடக்காது என்று உறுதியளிக்கிறேன் என பதிவிட்டுள்ளார், ஏற்கனவேஇங்கிலாந்து கடைசி டெஸ்டின் போது தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் இதனால் மான்செஸ்டர் டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.