இந்தியா கிடையாது...டி20 உலகக்கோப்பை இந்த அணிக்கு தான் - சவால் விடும் முன்னாள் வீரர்

டி20 உலகக்கோப்பை தொடரை இங்கிலாந்து அணியே வெல்லும் என முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.michael-vaughan

டி20 உலகக்கோப்பை தொடருக்கான முதற்சுற்று மற்றும் பயிற்சி ஆட்டங்கள் கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. 

ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் இந்த முறை சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார் என ஆவலுடன் காதிருக்கும் நிலையில் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள்  எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்பது குறித்து தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர். 

அந்த வகையில் முன்னாள் இங்கிலாந்து வீரரான மைக்கேல் வாகன், இந்த முறை சாம்பியன் பட்டத்தை இங்கிலாந்து அணியே வெல்லும் என கூறியுள்ளார். மேலும் இந்திய அணி கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுவது ஏன் என்பது எனக்கு தெரியவில்லை என்றும், டி20 போட்டிகளில் இந்திய அணி அவ்வளவு சிறப்பாக செயல்படுவது இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகியவை  எதிரணிகளை அச்சுறுத்தக்கூடிய அணிகள் என மைக்கேல் வாகன் புகழ்ந்துள்ளார். 


உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்