குடும்ப சண்டை காரணமாக பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் அதிரடி கைது

domesticviolence michaelslater
By Petchi Avudaiappan Oct 21, 2021 10:49 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஸ்லாட்டர் குடும்ப வன்முறையில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி 14வது ஐபிஎல் தொடங்கி நடந்த போது பல வீரர்களுக்கு கொரோனா உறுதியானதால் தொடர் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து வீரர்கள் அவரவர் நாடுகளுக்கு திரும்பினர். ஆனால் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் நாடு திரும்ப தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் மோரிஸன் உத்தரவிட்டார். 

இதனை கடுமையாக விமர்சித்த ஸ்லாட்டர் பிரதமர் உங்கள் கரங்களில் ரத்தம்படிந்துள்ளது என காட்டமாக விமர்சித்தார்.இந்நிலையில், குடும்ப சண்டை காரணமாக தற்போது ஸ்லாட்டர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட நியூ சௌத் வேல்ஸ் காவல்துறை  கடந்த 12 ஆம் தேதி குடும்ப வன்முறையில் ஸ்லாட்டர் ஈடுபட்டதாக எழுந்த புகாரையடுத்து அவரைக் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. 

கடந்த 1993 முதல் 2000ம் ஆண்டுவரை ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில்அசைக்க முடியாத இடத்தைப் பிடித்தவர் மைக்கேல் ஸ்லாட்டர். இதுவரை 74 டெஸ்ட் போட்டிகள், 42 ஒருநாள் போட்டிகளில்விளையாடியுள்ள ஸ்லாட்ட்5,312 ரன்கள் குவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றபின் மைக்கேல் ஸ்லாட்டர் பல்வேறு தொலைக்காட்சிகளில் வர்ணனையாளராகப் பணியாற்றி வருகிறார். ஆஸ்திரேலியத் தொலைக்காட்சி மட்டுமல்லாமல் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்,ஸ்கை உள்ளிட்டவற்றிலும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.