இந்திய வீரர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்... - ஆஸ்தி. முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் அட்வைஸ்...!
இந்திய வீரர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆஸ்திரேலிய வீரர்களுக்கு முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் அறிவுரை வழங்கியுள்ளார்.
ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. சமீபத்தில் நாக்பூரில் நடந்த தொடக்க டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.
இதனையடுத்து, இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடந்தது. இப்போட்டியில், இந்திய அணி ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது. 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
கேப்டன் மைக்கேல் கிளார்க் பேட்டி
இந்நிலையில், இந்திய வீரர்களிடமிருந்து ஆஸ்திரேலிய வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் அறிவுரை வழங்கியுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், ஒரு பயிற்சி ஆட்டத்தில் கூட ஆஸ்திரேலிய அணி பங்கேற்காதது மிகப்பெரிய தவறு. சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களில், எப்படி விளையாட வேண்டும் என்று இந்திய வீரர்களிடமிருந்து ஆஸ்திரேலிய வீரர்கள் கற்க வேண்டும். இந்தியாவின் பேட்டிங்கை ஆஸ்திரேலிய வீரர்கள் பார்க்காதது போன்றே உள்ளது என்று தெரிவித்துள்ளார்.