பெண் இல்லாமல் ஆணுக்கு குழந்தை - ஆராய்ச்சியில் சுவாரஸ்ய தகவல்
லண்டனில் உள்ள ஃபிரான்சிஸ் சிரிக் இன்ஸ்டியூட்டில் மனிதர்களின் மரபனு ஆராய்ச்சி குறித்த 3வது சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது.
ஆணின் திசு
அதில் ஜப்பானில் உள்ள கியூஷீ பல்கலைக்கழக பேராசிரியர் கட்ஷீஷிகோ ஹயாஷி பங்கேற்று உரையாற்றினார். அப்போது, ஆண்களின் திசுக்களில் இருந்து பாலூட்டிகளின் கருமுட்டைகள் முதல்முறையாக உருவாக்கப்பட்டுள்ளது. தம்முடைய ஆராய்ச்சியின் அடிப்படையில் செயல்பட்டு முன்னேற்றம் கண்டால்,

பத்தாண்டுகளுக்குள் ஆணின் திசுவில் இருந்து திறன்மிக்க மனித கருமுட்டையை உருவாக்கலாம். மற்ற விஞ்ஞானிகளோ, இன்னும் பெண்ணின் திசுவில் இருந்தே மனித கருமுட்டைகளை உருவாக்காதபோது இது எப்படி சாத்தியம் ஆகும் என்று கேட்கிறார்கள்.
எலியின் மீது சோதனை
அதே நேரத்தில் இரண்டு ஆண் எலிகளின் திசுக்களை கொண்டு, அவற்றின் மரபனுக்களுடன் ஒரு எலியை உருவாக்கி ஏற்கனவே விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். அதற்கு மரபணு பொறியியல் மற்றும் பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். ‘ஆணின் திசுவில் இருந்து வெற்றிகரமாக எலி உருவாக்கப்பட்டுள்ளது.’

தற்போது, மனித திசுக்களை வைத்து கருமுட்டைகளை உருவாக்கும் ஆராய்ச்சியில் இருக்கிறார்கள். இதில் பெரும் தடையாகவும் சிக்கலாகவும் பார்க்கப்படுவது, ஆராய்ச்சிக்காக ஆராய்ச்சிக் கூடத்தில் முட்டைகளை உருவாக்குவதையும், அதனை பாதுகாப்பதும் தான்.
குழந்தை பேரின்மையால் அவதிப்படும் பெண்கள் மற்றும் டர்னர்ஸ் சின்ட்ரோமால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் இந்த ஆராய்ச்சி உதவியாக இருக்கும்.
பெரும் தொழில்நுட்ப வசதிகள் இருந்தாலும் அவற்றை எல்லாம் பயன்படுத்தி, மனித திசுக்களை உருவாக்குதலும் அவற்றில் இருந்து முதிர்ச்சி அடைந்த முட்டையை உருவாக்குவது பெரும் சவாலானதாக இருக்கும் என்று சில விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். அத்துடன் தன் பாலின ஈர்ப்பாளர்களின் குழந்தை ஆசையும் இந்த ஆராய்ச்சி வெற்றி அடைந்தால் பூர்த்தியாகும் எனத் தெரிவித்துள்ளார்.