“நான் இன்னும் இறக்கவில்லை, உயிரோடு தான் இருக்கிறேன்” - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மியா கலீஃபா

mia khalifa death rumour mia reacts
By Swetha Subash Feb 02, 2022 12:54 PM GMT
Report

 நடிகை மியா கலீஃபா குறித்து சமூக வலைத்தளங்களில் பரவிய வதந்திகளுக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

பொதுவாகவே இணையத்தில் ரசிகர்கள் தங்களுக்குப் பிடிக்காத நடிகர் நடிகைகளை வைத்து டிரோல் செய்யும் கலாய்த்தும் கருத்துகள் பதிவிடும் கலாச்சாரம் பரவலாக இருந்து வருகிறது.

இதில் அதிகம் பாதிக்கப்படுவது சினிமா பிரபலங்கள் தான் என்று சொன்னால் அது மிகையல்ல. அந்த வகையில், சமீபத்தில்  நடிகை மியா கலீஃபா இறந்து விட்டதாக ஒரு செய்தியை சில விஷமிகள் இணையத்தில் பதிவு செய்து விட்டனர்.

இதனால் மியா கலீஃபாவின் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து தங்கள் துக்கத்தை வெளிப்படுத்தினர்.

இதனால் கடும் கோபத்தில் இருந்த மியா கலீஃபா நான் இன்னும் இறக்கவில்லை. உயிரோடு இருப்பதாகவே உணர்கிறேன் என்று புகைப்படத்தை பதிவிட்டு டிரோல் செய்தவர்களுக்கு பதிலடிக்கொடுத்திருக்கிறார்.

மியா கலீஃபாவின் முகநூலில் இவருடன் வாழ்ந்த நினைவுகளைப் பகிருங்கள் என்று எழுதப்பட்டிருந்ததால் நடந்த குழப்பம் என்று அவருடைய ரசிகர்கள் விளக்கியுள்ளனர்.