"கல்யாண வாழ்க்கை போர் அடிக்குது" - ஷாக் கொடுத்த மியா கலிஃபா

Mia kalifha Mia kalifha divorced
By Petchi Avudaiappan Jul 26, 2021 11:35 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

முன்னாள் ஆபாச பட நடிகை மியா கலிஃபா, தனது இரண்டாவது கணவரை விவாகரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

லெபனான் நாட்டில் பிறந்து ஆபாச படங்களில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானவர் மியா கலிஃபா கடந்த 2011 ஆம் ஆண்டு தனது நீண்டகால பள்ளித் தோழனை காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக 2016 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர்.

இதனையடுத்து ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சமையல் கலைஞர் ராபர்ட் சாண்ட்பர்க்குடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மியா கலிஃபா அறிவித்திருந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக இருவரும் எளிமையான முறையில் வீட்டிலேயே திருமணம் செய்து கொண்டதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில் கணவர் ராபர்ட் சாண்ட்பர்க்கை விவாகரத்து செய்துள்ளதாக மியா கலிஃபா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட அவர், ‘கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக எங்களது திருமண உறவை தக்கவைத்துக்கொள்ள நாங்கள் போதுமான முயற்சிகள் எடுத்தோம். ஆனால் அது பலனளிக்கவில்லை.

அதனால், திருமண உறவை முடித்துக்கொள்ள முடிவு செய்துள்ளோம். நாங்கள் இருவரும் திருமண உறவில் இருந்து பிரிந்தாலும், எங்களது நட்பை தொடர முடிவு செய்துள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.