"நாம ஜெயிச்சிட்டோம் ரோகித்து” - ஒரு வழியாக முதல் வெற்றியை பதிவு செய்த மும்பை அணி
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானை வீழ்த்தி மும்பை அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
மும்பை டி.ஓய்.பட்டீல் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களம் கண்ட ராஜஸ்தான் அணியில் அதிகப்பட்சமாக தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் 67 ரன்கள் விளாச அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது.
இதனை தொடர்ந்து 159 ரன்கள் இலக்குடன் மும்பை அணியில் கேப்டன் ரோகித் 2 ரன்களில் ஆட்டமிழக்க ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின் களம் கண்ட சூர்ய குமார் யாதவ் 51, திலக் வர்மா 35, இஷான் கிஷன் 26 ரன்கள் எடுக்க 19.2 ஓவர்களில் மும்பை அணி 5 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. 9 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி 8 ஆட்டங்களில் தோற்று தொடரில் இருந்து ஏற்கனவே வெளியேறிவிட்டது குறிப்பிடத்தக்கது.