கொல்கத்தா பந்துவீச்சு தேர்வு: ஹிட்மேன் பேக்

IPL2021 MIvKKR
By Irumporai Sep 23, 2021 02:29 PM GMT
Report

ஐபிஎல்2021 மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் இயான் மோர்கன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

ஐ.பி.எல். தொடரின் இன்று நடைபெறும் 34வது ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன.

அபுதாபியில் இன்று நடைபெறும் போட்டியில் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமான போட்டியாகும். புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ள மும்பை அணியும், புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ள கொல்கத்தா அணியும் இந்த போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேற முழுவீச்சில் களமிறங்கும்.

இரு அணிகளும் இதற்கு முன்பு ஐ.பி.எல். தொடர்களில் 28 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் மும்பை அணி 22 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா அணி 6 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

போட்டி இன்று நடைபெற உள்ள அபுதாபி ஷேக் சையத் மைதானத்தில் இரு அணிகளும் இதற்கு முன்பு 3 முறை மோதியுள்ளனர். அதில், 2 முறை மும்பை அணியும், 1 முறை கொல்கத்தா அணியும் வெற்றி பெற்றுள்ளது. இந்த சீசனில் ஏற்கனவே, இரு அணிகளும் மோதிக்கொண்ட போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

மும்பை அணியில் கேப்டன் ரோஹித் சர்மா திரும்பி உள்ளது அந்த அணிக்கு பலமாக இருக்கும். அதே நேரம் கொல்கத்தா அணியில் எந்த மாற்றமும் இல்லை. கடைசி போட்டியில் இடம் பெற்ற வீரர்களே மும்பை அணிக்கு எதிராக விளையாட உள்ளனர்.

இரு அணிகளின் விளையாடும் 11 வீரர்கள் மும்பை : டி-காக், ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், சவுரப் திவாரி, கிரன் பொல்லார்டு, குர்ணால் பாண்டியா, ஆடம் மைல்ன், ராகுல் சாஹர், ஜஸ்ப்ரித் பும்ரா, டிரெண்ட் போல்ட் கொல்கத்தா :

சுப்மன் கில், வெங்கடேஷ் அய்யர், ராகுல் திரிபாதி, நித்திஷ் ராணா, இயான் மார்கன், தினேஷ் கார்த்திக், ஆண்டருவ் ரஷல், சுனில் நரைன், ஃபெர்குஷன், வருண் சக்கரவர்த்தி, பிரதிஷ் கிருஷ்ணா