ipl 2021 : மும்பைக்கு எதிரான போட்டி - டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது டெல்லி

IPL 2021 MI vs DC DelhiCapitals mipaltan |
By Irumporai Oct 02, 2021 10:13 AM GMT
Report

ஐபிஎல் லீக் சுற்றின் மிகவும்  முக்கியமான ஆட்டத்தில் டெல்லியும் மும்பையும் இன்று மோதுகின்றன. ஐபிஎல் 2021 போட்டியில் மும்பை அணி மீதமுள்ள 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுவிட்டால் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுவிடலாம்.

டெல்லி அணி புள்ளிகள் பட்டியலில் முதல் இரு இடங்களில் ஒன்றைப் பிடிக்க முனைப்புடன் உள்ளது. புள்ளிகள் பட்டியலில் மும்பை அணி 10 புள்ளிகளுடன் 6-ம் இடத்திலும் தில்லி அணி 16 புள்ளிகளுடன் 2-ம் இடத்திலும் உள்ளன.

கடந்த இரு ஐபிஎல் போட்டிகளிலும் மும்பைக்கு எதிராக விளையாடிய 5 ஆட்டங்களில் 4-ல் தில்லி அணி தோல்வியடைந்துள்ளது. ஷார்ஜாவில் நடைபெறும் ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

டெல்லி அணியில் லலித் யாதவுக்குப் பதிலாக பிருத்வி ஷா இடம்பெற்றுள்ளார். மும்பை அணியில் ராகுல் சஹாருக்குப் பதிலாக ஜெயந்த் யாதவ் இடம்பெற்றுள்ளார்.