வெறும் சீன் தானா!! வேறு வழியில்லாமல் மும்பை நிர்வாகம் எடுத்த முடிவு - சிக்கலில் ஹர்திக்

Hardik Pandya Rohit Sharma Mumbai Indians IPL 2024
By Karthick Apr 28, 2024 10:00 AM GMT
Report

மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து தோல்விகளால் துவண்டு போயுள்ளது.

மும்பை இந்தியன்ஸ்

ஹர்திக் பாண்டியா கேப்டனாக கொண்டு விளையாடி வரும் மும்பை அணி பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றது. இது வரை அந்த அணி 9 போட்டிகளில் 3'இல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக நேற்று நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 257 ரன்களை விரட்டி கடைசியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

mi-team-hardik-pandya-rohit-sharma-ipl-2024-

புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள அந்த அணியின் Play off வாய்ப்பு கிட்டத்தட்ட முடித்து விட்டது. கடும் விமர்சனங்களை பெற்று வருகின்றார் ஹர்திக் பாண்டியா. கேப்டனாக நியமிக்கப்பட்டதில் இருந்தே பெரும் விமர்சனங்களை சந்தித்து வரும் ஹர்திக் பாண்டியா மீது பல்வேறு வகையான விமர்சனங்களும் அதிகரித்துள்ளன.

ரோகித் கொடுத்த அழுத்தம் - பணிந்த ஹர்திக்? நேற்றைய போட்டியில் இதனை கவனிச்சீங்களா

ரோகித் கொடுத்த அழுத்தம் - பணிந்த ஹர்திக்? நேற்றைய போட்டியில் இதனை கவனிச்சீங்களா

ஒரு பந்துவீச்சாளராகவும், பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் அவர் தோற்று விட்டார் என ரசிகர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டை வைத்து வருகிறார்கள்.

mi-team-hardik-pandya-rohit-sharma-ipl-2024-

அதே நேரத்தில், 2 ஆண்டுகள் குஜராத் அணியை மிக சிறப்பாக வழிநடத்தினார் ஹர்திக் என கூறப்படும் போது, எப்போதும் அணியின் பயிற்சியாளர் நெஹரா ஏன் பௌண்டரி லைன் அருகில் நின்றிருந்தார் என்பது இப்பொது புரிகிறதா என்றும் ஒரு தரப்பினர் குறை கூறுகிறார்கள்.

முடிவு 

குஜராத் அணியின் வெற்றிக்கு நெஹரா தான் காரணம் என கூறும் அவர்கள், ஹர்திக் பாண்டியா எதுவுமே செய்யவில்லை என்றும் சாடுகிறார்கள். அதே நேரத்தில் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய்க்கு மேல் ட்ரேடிங் செய்து ஹர்திக் பாண்டியாவை வாங்கி அவரை கேப்டனாக போட்டது பெரும் தவறா என அணி நிர்வாகமும் வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.      

mi-team-hardik-pandya-rohit-sharma-ipl-2024-

இந்த சூழலில் இனிவரும் ஆட்டங்களில் வெல்ல வில்லை என்றால் கேப்டன் பதவியில் இருந்து விலகும் படி மும்பை அணி நிர்வாகம் அவருக்கு அறிவுறுத்தியதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.