ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனைப் படைத்த மும்பை அணி - மாஸ் காட்டிய சென்னை

MS Dhoni Rohit Sharma Mumbai Indians TATA IPL IPL 2022
By Petchi Avudaiappan May 25, 2022 06:23 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளது. 

கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கிய நடப்பு ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகள் நிறைவடைந்து தற்போது பிளே ஆஃப் ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் குஜராத்,லக்னோ, ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய நிலையில் டெல்லி, பஞ்சாப், ஹைதராபாத், கொல்கத்தா, சென்னை, மும்பை அணிகள் தொடரிலிருந்து வெளியேறின.

இதில் நேற்று நடந்த முதல் பிளே ஆஃப் ஆட்டத்தில் ராஜஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அணி பைனலுக்குள் நுழைந்தது. இதனிடையே 5 முறை சாம்பியனான மும்பை அணி இம்முறை புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தையும், 4 முறை சாம்பியனான சென்னை அணி 9வது இடத்தையும் பெற்று ரசிகர்களை மட்டுமல்லாமல் கிரிக்கெட் உலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

இதைவிட மோசமாக ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக மும்பை அணி கடைசி இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. ஆனால் 2008 ஆம் ஆண்டு முதல் சென்னை அணி விளையாடிய அனைத்து தொடர்களிலும் ஒரு முறை கூட அந்த அணி கடைசி இடம் பெற்றதில்லை என்பது வியப்புக்குரிய விஷயமாக உள்ளது.