மும்பை அணி ஐபிஎல் தொடரை விட்டு வெளியேற காரணம் இதுதான் - ஷேன் வாட்சன் கருத்து
மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் மோசமான தோல்வியை சந்தித்தது குறித்து முன்னாள் சென்னை அணி வீரர் ஷேன் வாட்சன் கருத்து தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் முன்னாள் சாம்பியனான மும்பை அணி 12 போட்டிகளில் ஆடி 3 வெற்றிகளுடன் கடைசி இடத்தில் புள்ளிப்பட்டியலில் உள்ளது. ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தாலும் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்துவிடக்கூடாது என்பதில் முனைப்புடன் உள்ளதால் எஞ்சியுள்ள போட்டிகளில் அந்த அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தொடரை பொறுத்தவரை மும்பை அணி சரியான அணியை கட்டமைக்கவில்லை என்றும், ஒருசில வீரர்கள் தங்களது திறமையை காட்டுவதற்கு சரியான வாய்ப்பு கொடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இந்தநிலையில் ஐபிஎல் சீசனின் ஆரம்பகட்டத்தில் மும்பை அணி தொடர் தோல்வியை சந்திக்க என்ன காரணம் என முன்னாள் சென்னை அணி வீரர் ஷேன் வாட்சன் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், தொடரின் ஆரம்ப கட்டத்தில் அதிரடி வீரர் டிம் டேவிட்டிர்க்கு இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதிக தொகை கொடுத்து ஒரு வீரரை அணியில் இணைத்து விட்டு ஒழுங்காக வாய்ப்பளிக்கவில்லை என்றால் எப்படி அவருடைய திறமையை வெளிப்படுத்துவார் என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
என்னைப் பொறுத்த வரையில் அவருக்கு நான்கு அல்லது ஐந்து போட்டிகளில் வாய்ப்பு கொடுத்திருந்தால் மும்பை அணி போட்டிகளில் இவ்வளவு மோசமான நிலையை சந்தித்திருக்காது என தான் எண்ணுவதாக வாட்சன் கூறியுள்ளார்.