மிக முக்கிய வீரர்களை கழட்டிவிட்ட மும்பை இந்தியன்ஸ் அணி- கடுப்பான ரசிகர்கள்
2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணி தக்க வைத்துள்ள வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் புதிதாக அகமதாபாத், லக்னோ அணிகள் இணைக்கப்பட்டு, மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ளது. அதேசமயம் புதிய அணிகளுக்கு வீரர்களை தேர்வு செய்யும்விதமாக 15ஆவது சீசனுக்கு முன்பு மெகா ஏலம் நடைபெறவுள்ளது.
இதனால், ஒரு அணி 3 உள்நாட்டு வீரர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரர் அல்லது தலா இரண்டு உள்,வெளிநாட்டு வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம் என பிசிசிஐ தெரிவித்திருந்தது. இந்நிலையில் எந்தெந்த அணிகள் யார் யாரை தக்கவைத்துள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அந்தவகையில், ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியும் தங்களது அணியில் தக்க வைக்கப்பட்டுள்ள வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் சர்மாவை 16 கோடிக்கும், பும்ராஹ்வை 12 கோடிக்கும், சூர்யகுமார் யாதவை 8 கோடிக்கும், கைரன் பொலார்டை 6 கோடிக்கும் தக்க வைத்துள்ளது.
ஆனால் ஐபிஎல் வரலாற்றில் மிக முக்கிய பங்கு வகிக்கும் ஹர்திக் பாண்டியா மற்றும் க்ரூணல் பாண்டியா ஆகியோரையும், கடந்த தொடரில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷனையும் அந்த அணி கழட்டி விட்டுள்ளது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.