டிவி, ஸ்மார்ட்போன் வாங்க நினைப்பவர்களுக்கு ஆப்பு வைத்த நிறுவனம்

Xiaomi MI smartphones Price hike
By Petchi Avudaiappan Jul 02, 2021 01:06 PM GMT
Report

 சியோமி நிறுவனம் அதன் தயாரிப்புகளின் விலையை தொடர்ந்து அதிகரித்து வருவது வாடிக்கையாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அந்நிறுவனம் சமீபத்தில் ரெட்மி நோட் 10 மற்றும் ரெட்மி நோட் 10 ப்ரோ உள்ளிட்ட சில ஸ்மார்ட்போன்களின் விலையை உயர்த்தியது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் டிவிக்களின் விலையை அந்நிறுவனம் உயர்த்தியுள்ளது.

டிவி, ஸ்மார்ட்போன் வாங்க நினைப்பவர்களுக்கு ஆப்பு வைத்த நிறுவனம் | Mi Redmi Tvs Price Hike In India

பற்றாக்குறை மற்றும் விநியோகச் சங்கிலி கட்டுப்பாடுகள் காரணமாக இதன் விலை ரூ.500 இல் இருந்து ரூ.2000 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சந்தைக்கு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.