“5 முறை சாம்பியன் டீம்-ன்னு கூட பாக்கலையே” - மும்பையை ஓட விடும் ஐபிஎல் அணிகள்
2022 ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் அணியான மும்பை அணி அடிமேல் அடி வாங்கி வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரில் 15வது சீசன் கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் யாரும் எதிர்பாராத விதமாக 5 முறை சாம்பியன் அணியான மும்பை அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. பழைய அணிகள் தொடங்கி புதிதாக வந்த 2 அணிகளும் அவர்களை ஒருகை பார்த்து விட்டதால் என்ன செய்வதென்றே தெரியாமல் அணி நிர்வாகம் விழி பிதுங்கியுள்ளது.
இதுவரை மும்பை விளையாடிய 6 போட்டிகளிலும் தோற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இதன் மூலம் பிளே ஆப் வாய்ப்பு கானல் நீராகிவிட்டது.ஐபிஎல் மெகா ஏலத்துக்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரர்கள் வேறு அணிக்கு சென்று விட்டது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
பிளேயிங் லெவனில் வெறும் 6 பேட்ஸ்மேன்களை வைத்து களமிறங்கிய மும்பை அணியின் தோல்விக்கு முழு பொறுப்பையும் நான் ஏற்று கொள்வதாக கேப்டன் ரோகித் சர்ம் பகிரங்கமாக தெரிவித்தார். ஆனால் ஒவ்வொரு ஆட்டத்தையும் மகிழ்வுடன் எதிர்கொண்டு கடந்த காலத்தில் எப்படி இருந்தேனோ அதேபோல் இனி வரும் போட்டிகளை அணுகுகி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்ப முயற்சி செய்வோம் என்றும் ரோகித் சர்மா ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்தார். மும்பை அணி என்ன செய்யப் போகிதென்று பார்க்கலாம்.