எம்.ஜி.ஆர் சிலையை தகர்த்தவரை போலீசார் கைது செய்தனர்
தஞ்சையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் சிலை தகர்க்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை வடக்குவீதியில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் சிலை உள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள் எம்.ஜி.ஆர் சிலையை உடைக்க முயன்றுள்ளனர். ஆனால் அது உடைக்க முடியாததால் சிலையை பெயர்த்து பீடத்தின் பின்புறம் சிலையை துாக்கி வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதையடுத்து இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் எம்.ஜி.ஆர் சிலையை பெயர்த்து பீடம் பின்புரம் தனியாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தகவல் அறிந்த அதிமுகவினர் ஏராளமானோர் திரண்டனர்.இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது.இதையடுத்து சிலையை மீட்டு மீண்டும் பீடத்தில் வைத்தனர்.
இதுகுறித்து மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி அதிமுகவினர் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர் விசாரணையில் தஞ்சை வடக்குவாசல் கல்லறைமேட்டு தெருவை சேர்ந்த சேகர் என்பர் குடிபோதையில் சிலையை பெயர்த்து வீசி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சேகரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.