அதிமுக vs பாஜக..! எம்.ஜி.ஆருக்கு அணிவிக்கப்பட்ட காவி உடை..மறியலில் அதிமுகவினர்

J Jayalalithaa M G Ramachandran Tamil nadu K. Annamalai Edappadi K. Palaniswami
By Karthick Sep 28, 2023 07:49 AM GMT
Report

தொடரும் அதிமுக - பாஜக சண்டையில் சென்னை அருகில் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி துண்டு அணிவிக்கப்பட்டுள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பாஜக - அதிமுக

தமிழக அரசியலில் தற்போது பெரும் விவாத பொருளாக இருக்கும் அதிமுக பாஜக கூட்டணி முறிவு பற்றி நாளும் தினமும் பல கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. அதிமுகவின் துணை பொதுச்செயலாளர் இன்று இது குறித்து கருத்து தெரிவித்து வரும் 2026-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிரடியாக கூறிய நிலையில், பாஜகவினர் இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வருகின்றது.

mgr-statue-covered-with-kaavi-dress-in-chennai

பாஜக தமிழகத்தை பொருத்த வரை மீண்டும் ஒரு தனி கூட்டணி ஒன்றை அமைத்து தேர்தலை சந்திக்கும் சூழல் ஏற்பட்டிருக்கும் நிலையில், இந்த கூட்டணி முறிவு குறித்து அண்ணாமலை மீது தான் அதிமுகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

எம்.ஜி.ஆருக்கு காவி துண்டு

ஜெயலலிதாவில் துவங்கிய அண்ணாமலையின் கருத்துக்கள் தொடர்ந்து திராவிட கட்சிகளின் தலைவர் அண்ணாவை விமர்சிக்க அதிமுகவினர் மிகவும் அதிருப்தி அடைய செய்தது. அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளர், அண்ணாதுரை என அடுத்தடுத்து அண்ணாமலை விமர்சித்த நிலையில், தற்போது அக்கட்சியின் எம்.ஜி.ஆரும் பாஜகவினரால் குறிவைக்கப்பட்டுள்ளார்.

mgr-statue-covered-with-kaavi-dress-in-chennai

சென்னையை அடுத்த திருப்போரூரில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆரின் உருவசிலைக்கு காவி துண்டு போடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.