புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நினைவுதினம் - ஈபிஎஸ், ஓபிஎஸ் புகழஞ்சலி!

MGR Tamil nadu AIADMK Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Sumathi Dec 24, 2022 04:18 AM GMT
Report

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர்-ன் 35வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

எம்ஜிஆர்  நினைவு தினம்

அண்ணாவின் மறைவுக்குப் பிறகு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என தனி கட்சியை தொடங்கி, சட்டமன்றத் தேர்தலில் தொடர்ந்து மூன்று முறை தமிழகத்தில் வெற்றி பெற்று முதலமைச்சரானார். அதன்பின் 1987 ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி தனது 70 வது வயதில் எம்ஜிஆர் உயிரிழந்தார்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நினைவுதினம் - ஈபிஎஸ், ஓபிஎஸ் புகழஞ்சலி! | Mgr Death Anniversary Ops Eps Tweet

ஓபிஎஸ்

இந்நிலையில், அவரது 35ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், மண் குடிசையில் பிறந்து, மக்கள் தலைவனாகி, மன்னனாக மகுடம் சூடி, சின்னம் என்றால் இரட்டை இலை,

தலைவன் என்றால் எம்ஜிஆர் என கடைக்கோடி மக்களையும் தனது செயல்பாட்டால் ஈர்த்து, அஇஅதிமுகவிற்கு வெற்றியை மட்டுமே பரிசாகக் கொடுத்த புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆரை போற்றி வணங்குகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஈபிஎஸ்

மேலும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சத்துணவு திட்டம் தந்த சரித்திர நாயகர், மக்கள் இதயத்தில் நீக்கமற வாழ்ந்து வரும் இதயக்கனி: அவர் வகுத்து தந்த பாதையில் பயணிப்பதையே பெருமையென கொண்டு, எம்.ஜி.ஆர்-க்கு எங்கள் புகழஞ்சலி" என பதிவிட்டுள்ளார்.