‘’ ஏழைகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தவர் எம்.ஜி. ஆர் ‘’ - பிரதமர் மோடி புகழாரம்
எம்ஜிஆர் தமிழ் திரைப்பட நடிகராகவும்,1977 முதல் அவர் மரணிக்கும் வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராக தொடர்ந்து மூன்று முறை இருந்தவர். மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கு உயரிய விருதுகளில் ஒன்றான பாரத ரத்னா விருது மத்திய அரசால் அளிக்கப்பட்டுள்ளது.
சத்துணவு திட்டங்கள், விதவை ஆதரவற்ற பெண்களுக்கு திருமண உதவி ,மகளிருக்கு சேவை நிலையங்கள், இலவச சீருடை, இலவச பாடநூல் வழங்குதல் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை தமிழகத்திற்கு வகுத்து தந்தவர் .
இந்நிலையில் எம்ஜிஆரின் 105 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில்,:
பாரத ரத்னா எம்.ஜி.ஆரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். சமூகநீதி, அதிகாரமளித்தல் ஆகியவற்றில் முதன்மையான சிறந்த தலைவராக அவர் பரவலாகப் போற்றப்படுகிறார். அவரது திட்டங்கள் ஏழைகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தன.
— Narendra Modi (@narendramodi) January 17, 2022
பாரத ரத்னா எம்.ஜி.ஆரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். சமூகநீதி, அதிகாரமளித்தல் ஆகியவற்றில் முதன்மையான சிறந்த தலைவராக அவர் பரவலாகப் போற்றப்படுகிறார்.
அவரது திட்டங்கள் ஏழைகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தன. அவரது திரையுலக பெருந்திறனும் அனைவராலும் போற்றப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.