மெக்சிகோவில் மனித தலையை கவ்விக்கொண்டு ஓடிய தெரு நாய் - பதற வைக்கும் அதிர்ச்சி வீடியோ...!
மெக்சிகோவில் மனித தலையை கவ்விக்கொண்டு ஓடிய தெரு நாய்யின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனித தலையை கவ்விக்கொண்டு ஓடிய தெரு நாய்
மெக்சிகோவில் ஜாகேட்கஸ் என்ற வீதியில் துண்டிக்கப்பட்ட மனித தலையை ஒரு தெருநாய் ஒன்று கவ்விக்கொண்டு ஓடியது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஒரு நபர் அதை வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டார்.
இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த தெரு நாயை தேடிப் பிடித்து, மனித தலையை மீட்டனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் குற்றச் சம்பவம் நடந்த இடத்திலிருந்து இந்த தலையை நாய் கவ்வி வந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது, இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
