கடலுக்கு அடியில் பயங்கரம்.. பரபரப்பு வீடியோ!

fire mexico under sea
By Anupriyamkumaresan Jul 05, 2021 05:25 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in அமெரிக்கா
Report

மெக்சிகோ வளைகுடாவில் எரிவாயு கசிவால் கடலுக்கடியில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

மெக்சிகோ வளைகுடாவில் அமைந்துள்ள மெக்சிகன் பெமெக்ஸ் நிறுவனத்தின் எண்ணெய் வயல் அருகே கடலுக்கடியில் மிகப்பெரிய வெடிப்பு ஏற்பட்டது அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கடலுக்கு அடியில் பயங்கரம்.. பரபரப்பு வீடியோ! | Mexico Manna Valaikuda Under Sea Fire Accident

இதனால் காலை 5 மணி முதல் தீப்பற்றி எரிந்தது. கடலுக்கடியில் 78 மீட்டர் ஆழத்தில் உள்ள ஒரு குழாயில் எரிவாயு கசிவு ஏற்பட்டதால் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடல்நீருக்கு மேல் பிரகாசமாக நெருப்பு எரிந்து கொந்தளித்தது பார்ப்பதற்கு எரிமலைக் குழம்பு போல தோற்றமளித்தது. இந்த தீ விபத்து வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் 5 தீயணைப்பு கப்பல்கள் உதவியோடு, 5 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு பாதுகாப்பாக தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் எந்தவொரு ஊழியரும் காயமடையவில்லை என பெமெக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த எரிவாயு கசிவால் உற்பத்தியும் பாதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.